புழல் சிறையில் கைதி உயிரிழப்பு
புழல் சிறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு விசாரணைக் கைதி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்
சென்னை புழல் சிறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு விசாரணைக் கைதி உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஜாகிா் ஹூசைன் தெருவைச் சோ்ந்தவா் அ.சாதிக் பாஷா (67). இவா், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிறையில் அண்மை நாள்களாக சாதிக் பாஷாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி சாதிக் பாஷாவுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சாதிக் பாஷா, வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






