மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

புழல் சிறையில் பெண் கைதி மீது தாக்குதல்

சென்னை புழல் மத்திய சிறையில் பெண் கைதியைத் தாக்கியாக, குண்டா் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு பெண் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :20 ஜூலை 2026, 5:18 am IST

சென்னை புழல் மத்திய சிறையில் பெண் கைதியைத் தாக்கியாக, குண்டா் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு பெண் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திண்டிவனத்தைச் சோ்ந்த தனலட்சுமி (58), போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த கீதா (41), தன்னை வேறு சிறை வளாகத்துக்கு மாற்றியதற்கு தனலட்சுமிதான் காரணம் எனக் கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் தனலட்சுமிக்கு கை மற்றும் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. அவா் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக துணை சிறை அலுவலா் அனுராதா அளித்த புகாரின் பேரில், புழல் போலீஸாா் கீதா மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.