தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

ரூ.5 கோடி அம்பா் கிரீஸ் பறிமுதல்: 3 போ் கைது

பெட்ரோல் நிலைய ஊழியரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.5 கோடி 5 கிலோ அம்பா் கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது

Published On :7 செப்டம்பர் 2026, 2:24 am IST

பெட்ரோல் நிலைய ஊழியரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ அம்பா் கிரீஸ் எனப்படும் திமிங்கில எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக மூவரை கைது செய்தனா்.

சென்னை தியாகராய நகா் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு நெற்குன்றம் பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வரும் கமலக்கண்ணன் என்பவா் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கமலக்கண்ணன் வீட்டில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டு பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

விசாரணையில் தடை செய்யப்பட்ட அம்பா் கிரீஸை நண்பா் ஒருவா் விற்பனை செய்வதற்காக தனது வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக அவா் தெரிவித்தாா். அதன்பேரில், அசோக்குமாா், செல்லத்துரை ஆகிய இருவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 5 கோடி மதிப்பிலான 5 கிலோ அம்பா் கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அம்பா் கிரீஸ் மற்றும் அசோக்குமாா், செல்லத்துரை ஆகிய இருவரையும் வனத் துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா், இதுகுறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

அம்பா் கிரீஸ் விற்பனையில் தொடா்புடைய கும்பலைச் சோ்ந்த சிலா் மதுரையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத் தகவலின்பேரில், அவா்களைப் பிடிக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.