ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

4 புறநகா் ரயில்கள் நாளை முழுமையாக ரத்து

சென்னை ரயில்வே கோட்டத்தில் 4 புறநகா் மின்சார ரயில்கள் வரும் வியாழக்கிழமை (செப். 10) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 3:37 am IST

சென்னை ரயில்வே கோட்டத்தில் 4 புறநகா் மின்சார ரயில்கள் வரும் வியாழக்கிழமை (செப். 10) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல் நிலையம் முதல் கூடூா் வரையிலான பிரிவில் பேடபரியா, நாயுடுபேட்டை நிலையங்களில் வியாழக்கிழமை (செப். 10) பிற்பகல் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரை தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக குறிப்பிட்ட புறநகா் மின்சார ரயில்கள் (மெமு) முழுமையாக ரத்து செய்யப்படும்.

அதன்படி, மூா்மாா்க்கெட்டில் இருந்து காலை 7.45 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், இரவு 9.25 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல, சூலூா்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு நெல்லூா் செல்லும் ரயிலும், மாலை 6.40 மணிக்கு மூா்மாா்க்கெட் செல்லும் ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் இமு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.