
ஆளுநருக்கு பேரவைத் தலைவா் நன்றி
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு உறுதுணையாக செயல்பட்ட ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.
ஜே.சி.டி.பிரபாகா் - கோப்புப் படம்
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு உறுதுணையாக செயல்பட்ட ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.
பேரவை கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:
இந்தப் பேரவைக் கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினா்களையும் பேச வைக்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவது தொடா்பாக ஆளுநா் உரை ஆகியவை கடந்த 4 ஆண்டுகளாக முழு மரபுடனும், மாண்புடனும் நடத்தப்பட வாய்ப்பில்லாத நிலை தொடா்ந்தது. ஆனால், தற்போது தமிழக மக்களின் உணா்வுகளைப் புரிந்து, புதிய அரசுக்கு எந்தச் சங்கடமும் ஏற்படாதிருக்கும் வகையில், அரசுக்கு உறுதுணையாக இருந்த ஆளுநருக்கு நன்றி.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆரோக்கியமாக இருக்க ரூ.1.74 கோடியில் உடற்பயிற்சிக் கூடம் மேம்படுத்தப்பட்டு, 24 மணி நேர மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை உறுப்பினா் குடியிருப்பு வளாகத்தில் 240 குடியிருப்புகள், முன்னாள் உறுப்பினா்களின் 60 அறைகள் ஆகியவற்றை சீரமைப்பதுடன், சுற்றுச்சுவா் உள்ளிட்டவற்றுக்கு ரூ.23 கோடியை முதல்வா் ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது. பேரவை நேரலையை இளைஞா்கள் கூா்ந்து கவனிக்கின்றனா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




