திருமுல்லைவாயலில் ரூ.3.69 கோடியில் முதல்வர் படைப்பகம்: மாணவர் பயன்பாடு அதிகரிப்பு

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் ரூ.3.69 கோடியில் அமைந்துள்ள முதல்வர் படைப்பகத்தை மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

திருமுல்லைவாயலில் ரூ.3.69 கோடியில் அமைந்துள்ள முதல்வர் படைப்பகம்

Published On :8 செப்டம்பர் 2026, 7:00 am IST

த. மணிமாறன்

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் ரூ.3.69 கோடியில் அமைந்துள்ள முதல்வர் படைப்பகத்தை மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

கல்வி மற்றும் மாணவர்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் சோழம்பேடு பகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3.69 கோடியில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தரைத்தளம், முதல் தளம், 2-ஆம் தளம் ஆகிய மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது. தரைத் தளத்தில் முகப்பு மண்டபம், வரவேற்புரை, கண்காணிப்பு கேமராக் கள் அறை, சேமிப்பு அறை, சிறுவர் வாசிப்பறை கணினி வசதி, புத்தக சேமிப்பு வசதி ஆண்கள், பெண்கள் தனித்தனியான கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை நிறுவப்பட்டுள்ளது.

இந்தப் படைப்பகம் மாணவர்கள், இளைஞர்களுக்கான சுல்வி வளர்ச்சியை ஊக்கு விக்கும் முக்கிய மையமாக அமைந்துள்ளது. பள்ளி மற் றும் கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், வாசிப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தனித்தனி வாசிப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள் அமைதியான சூழலில் படிக்கக்கூடிய வகையில் தேவையான வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், கணினி வசதி, இருக்கை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற் பாடுகள் ஆகியவை முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, இந்த படைப்பகத்தை மாணவர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு நபருக்கு அரை நாளுக்கு ரூ.5, முழு நாளுக்கு ரூ.10, ஒரு வாரத்திற்கு ரூ.60, ஒரு மாதத்திற்கு ரூ.230, 3 மாதங்களுக்கு ரூ.600 மற்றும் 6 மாதங்களுக்கு ரூ.1200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கருத்தரங்கம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட அறையில் 1 மணி நேரத்திற்கு ரூ.500, அரை நாளுக்கு ரூ.1,500 மற்றும் முழு நாளுக்கு ரூ. 2,500 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

மேற்கண்ட கட்டணங்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகின்றன. முதல் தளத்தில் எல்இடி திரை, மேசை, நாற்காலிகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்துவதற் கான இடவசதி, 2-ஆம் தளத்தில் மாணவர்கள் நீண்ட நேரம் இடைவெளியில் ஓய்வெடுத்து உணவருந்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது.

படைப்பகக் கட்டடத்தில் ஒரே நேரத்தில் 150 நபர்கள் அமர்ந்து படிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த படைப்பகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் படைப்பகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பகம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், மத்திய மாநில அரசுப் பணிக்கான போட்டி தேர்வு தயாரிப்புக்கும் மற்றும் வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவும் முக்கிய பங்காற்றுகிறது. இதனை கடந்த 4 மாதங்களில் 8,500-க்கு மேற்பட்டோர் பயன்படுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.