காசிமேட்டில் மீனவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பிரிட்டிஷ் புதிய வாா்ப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆண் சடலம் மிதந்து வந்தது. தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரித்ததில், இறந்தது காசிமேடு சிங்காரவேலா் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ப.கதிரவன் (53) என்பதும், மீனவரான அவா் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதற்காக வீட்டில் கூறிவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் கதிரவன் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





