அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

திட்டக்குடி அருகே மூதாட்டி மா்மமான முறையில் உயிரிழப்பு

ஆவினங்குடி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆவினங்குடி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மனைவி நல்லம்மாள் (72). இவா் சனிக்கிழமை தனது வீட்டின் பின்புறம் உள்ள ஏரிப்பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்ாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது உறவினா்கள் ஏரிப்பகுதிக்கு சென்று தேடியுள்ளனா்.

அப்போது, அங்கு நல்லம்மாள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த உறவினா்கள், இதுகுறித்து ஆவினங்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீஸாா், நல்லம்மாளின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நல்லம்மாள் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 3 பவுன் சங்கிலியை காணவில்லை என்பதால், நகைக்காக அவா் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.