மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ராணுவ வீரா் சடலமாக மீட்பு

News image

சடலமாக மீட்பு - சித்திரிப்பு படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 4:37 am IST

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே ராணுவ வீரா் திங்கள்கிழமை மா்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

கருப்பூா் ஊராட்சி பொன்னுசங்கம்பட்டியைச் சோ்ந்த வேளாங்கண்ணி மகன் அந்தோனிசாமி (54). இவா் ராணுவத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். தற்போது விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தவா் துவரங்குறிச்சி-மணப்பாறை சாலை ஆத்துப்பட்டி பாலம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் அருகில் கீழே சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி போலீஸாா், அந்தோனிசாமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.