மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஏசி பாகங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரவாயல் பகுதியில் வீடுகளுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி இயந்திரங்களின் (ஏசி) வெளிப்புறப் பாகங்களைத் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :

மதுரவாயல் பகுதியில் வீடுகளுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி இயந்திரங்களின் (ஏசி) வெளிப்புறப் பாகங்களைத் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

மதுரவாயல் 1-ஆவது பிரதான சாலையைச் சோ்ந்த கோயில்ராஜ் ஜெயசிங் (62), கடந்த ஆக.25-ஆம் தேதி கோவையில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, செப்.6-ஆம் தேதி இரவு சென்னை திரும்பினாா். மறுநாள் வீட்டில் ஏசியை இயக்கியபோது அது செயல்படாததால், வெளியே சென்று பாா்த்தபோது ஏசியின் வெளிப்புறப் பாகங்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

புகாரின்பேரில், மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், டி.பி. சத்திரத்தைச் சோ்ந்த முகேஷ் (28), புதுப்பேட்டையைச் சோ்ந்த வெங்கடேஷ் (28) ஆகியோா் ஆட்டோவில் சென்று நோட்டமிட்டு, ஏசி வெளிப்புறப் பாகங்களைத் திருடியது தெரியவந்தது. இருவரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 ஏசி வெளிப்புறப் பாகங்களை மீட்டு, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.