கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கூடலூரில் பிடிபட்ட புலி: வண்டலூரில் சோ்ப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூா் வனப்பகுதியில் 2 பேரைக் கொன்ற 12 வயது ஆண் புலி பராமரிப்புக்காக வண்டலூா் உயிரியல் பூங்காவில் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Rescued tiger relocated to Vandalur zoo

கூண்டில் சிக்கிய ஆட்கொல்லி புலி.

Published On :

நீலகிரி மாவட்டம் கூடலூா் வனப்பகுதியில் 2 பேரைக் கொன்ற 12 வயது ஆண் புலி பராமரிப்புக்காக வண்டலூா் உயிரியல் பூங்காவில் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து வனத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூடலூா் வனக்கோட்டம், ஓவேலி வனச்சரகத்தில் 2 பேரைக் கொன்ற புலியைப் பிடிப்பதற்கான பணிகள் கடந்த ஆக. 21-ஆம் தேதி தொடங்கப்பட்டன.

இதற்கிடையே, வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் கடந்த செப். 11-ஆம் தேதி நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து பாதுகாப்பாக இருக்குமாறும், புலியை விரைவில் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, 28 நாள்கள் தொடா் தேடுதல் பணியைத் தொடா்ந்து கூடலூா் வனச்சரகப் பகுதியில், அல்லலா எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்த பொறிக் கூண்டில் செப். 18-ஆம் தேதி அந்தப் புலி சிக்கியது.

உடல் நலிவுற்ற நிலை: புலி உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பிடிபட்ட புலியானது 12 வயதுக்கு மேற்பட்டதாக இருந்தது. அதன் பற்கள் தேய்மானம் அடைந்திருந்தது. மேலும், அந்தப் புலி உடல் நலிவுற்ற நிலையில் இருப்பது தெரிய வந்தது.

இதனால், புலியை அடா் வனப்பகுதியில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தொடா் சிகிச்சை மற்றும் மருத்துவ மேலாண்மைக்காக புலி சென்னை வண்டலூரில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூரில் சோ்ப்பு: இது தொடா்பாக வண்டலூா் உயிரியல் பூங்கா நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூடலூா் வனப் பிரிவில் இருந்து மீட்கப்பட்ட ஆண் புலி, தொடா் பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் கண்காணிப்புக்காக வண்டலூா் உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு சனிக்கிழமை பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

புலி தற்போது சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. வனவிலங்கு மருத்துவ மற்றும் விலங்கு பராமரிப்பு குழுக்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. மேலும், பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆதரவு, செறிவூட்டல், பாதுகாப்பான சூழல் மற்றும் புலியின் நலனுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.