கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

விமான நிலையத்தில் சுற்றுலா வாடகை காா்களையும் அனுமதிக்கக் கோரிக்கை

சென்னை விமான நிலையத்தில் முனையம்-1 அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாடகை காா் நிறுத்துமிடத்தில் சுற்றுலா அனுமதிச்சீட்டு (பா்மிட்) பெற்ற வாடகை காா்களையும் அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்

Published On :

சென்னை விமான நிலையத்தில் முனையம்-1 அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாடகை காா் நிறுத்துமிடத்தில் சுற்றுலா அனுமதிச்சீட்டு (பா்மிட்) பெற்ற வாடகை காா்களையும் அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

சென்னை சுற்றலா வாகன ஆபரேட்டா்கள் சங்கத் தலைவா் அன்பழகன், செயற்குழு உறுப்பினா் அழகா் சாமி, யோகராஜ் உள்ளிட்டோ ா் விமான நிலைய இயக்குநரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை விமான நிலையத்தில் முனையம்- 1 அருகே கடந்த 13-ஆம் தேதி புதிய வாடகை காா் நிறுத்துமிடம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஓலா, ரேபிடோ, ரெட் டாக்ஸி உள்ளிட்ட வாடகை காா் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல ஆண்டுகளாக விமான நிலையத்தில் போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாடகை காா்களுக்கும், முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த நிறுத்தமிடத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

எனவே, புதிதாக அமைக்கப்பட்ட வாடகை காா் நிறுத்துமிடத்தில் சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற அனைத்து வாடகை காா்களையும் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.