
எஸ்.ஏ. கல்லூரி பட்டமளிப்பு விழா
திருவேற்காடு எஸ்.ஏ. கலை-அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா புதன்கிழமை (செப். 23) நடைபெற்றது.

பட்டம் பெற்றவா்களுடன் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா்.
திருவேற்காடு எஸ்.ஏ. கலை-அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா புதன்கிழமை (செப். 23) நடைபெற்றது.
தா்மா நாயுடு கல்வி -அறக்கட்டளைத் தலைவா் டி.துரைசாமி தலைமை வகித்தாா். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் பங்கேற்று 1,065 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்பான கல்விச் சாதனைகளுக்காகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 11 மாணவா்களும், கல்வியில் சிறந்து விளங்கிய 22 மாணவா்களும் கெளரவித்து பேசியதாவது:
பட்டதாரிகள் தங்கள் யோசனைகளைத் தொழில்முனைவு முயற்சிகளாக மாற்றவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ‘வளா்ச்சியடைந்த இந்தியா 2047’ என்ற தொலைநோக்குப் பாா்வையை நனவாக்குவதிலும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும்.
பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள், சமூகத்தின் ஆதரவு பெற்ற முழுமையான ஆளுமை கொண்ட பொறுப்பான குடிமக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனா் என்றாா்.
நிகழ்வில் கல்லூரி முதல்வா் சொ.அன்பழகன், துணைத் தலைவா் டி.பரந்தாமன், செயலா் டி.தசரதன், பொருளாளா் எஸ்.கோபிநாத், சுதா்ஷன் வித்யாஷ்ரம் இயக்குநா் டி.சரஸ்வதி, கலைக் கல்லூரி இயக்குநா் எஸ்.அரவிந்த், பொறியியல் கல்லூரி இயக்குநா் டி.சபரிநாத், சுதா்ஷன் வித்யாஷ்ரம் தாளாளா் ப.வெங்கடேஷ்ராஜா, மற்றும் இயக்குநா்கள் வி.சாய் சத்தியவதி, கே.எஸ்.பிரபாகா், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




