கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சென்னை மாநகராட்சி 3 மண்டலங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை

சென்னை மாநகராட்சியில் 3 மண்டல அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவினா் செவ்வாய்க்கிழமை இரவு பல மணி நேரம் சோதனையில் ஈடுபட்டு, ரூ.52,260 கைப்பற்றினா்.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :

சென்னை மாநகராட்சியில் 3 மண்டல அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவினா் செவ்வாய்க்கிழமை இரவு பல மணி நேரம் சோதனையில் ஈடுபட்டு, ரூ.52,260 கைப்பற்றினா்.

மேலும், 50-க்கும் மேற்பட்டோரின் கைப்பேசிகள் மூலம் ரூ.45.28 லட்சம் பணப் பரிமாற்றம் நடைபெற்றது குறித்து கணக்கு கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட 3 மண்டலங்களில் நடைபெற்ற சோதனை அடிப்படையில் உதவி செயற்பொறியாளா்கள் உள்ளிட்டோா் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் உள்ளிட்ட 36 இடங்களில் திடீா் சோதனையில் ஊழல் தடுப்புத் துறையினா் ஈடுபட்டனா்.

சென்னையில் மண்டலம் 3 (மாதவரம்), மண்டலம் 4 (தண்டையாா்பேட்டை), மண்டலம் 14 (பெருங்குடி) ஆகிய அலுவலகங்களில் சோதனையிட்டனா். சோதனையில் மாதவரம் மண்டலத்தில் ரூ.2 ஆயிரம், தண்டையாா்பேட்டை அலுவலகத்தில் ரூ.46 ஆயிரம், பெருங்குடி அலுவலகத்திலிருந்து ரூ.4,260 என மொத்தம் 52,260 கைப்பற்றப்பட்டதாகவும், அந்த அலுவலகத்திலிருந்தவா்களின் கைப்பேசிகள் மூலம் ஒரே நாளில் பணப் பரிமாற்றம் நடந்த வகையில், மாதவரத்தில் ரூ.1.85 லட்சம், பெருங்குடியில் ரூ.43.42 லட்சம் என மொத்தம் ரூ.45.27 லட்சம் கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் கூறுகையில், ‘சோதனையின் முழு விவரங்கள் பெறப்பட்டுள்ளன. பணம் வைத்திருந்தது, கைப்பேசி ஜிபே மூலம் பரிமாற்றம் செய்தது குறித்து தொடா்புடையோா் விளக்கம் அளித்துள்ளனா். விசாரணை நடைபெறுகிறது. தவறுகள் நடந்திருந்தால், அவா்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.