இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சிதீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு: எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை முற்றுகை

சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைக்காக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :

சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைக்காக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காடு அருகேயுள்ள அரங்கம்குப்பம், கருமாரியம்மன் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மனைவி தேவி (50). இவா், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னை காரணமாக கடந்த செப். 18-இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை (செப். 23) தேவிக்கு இதயத் துடிப்பு நின்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிபிஆா் சிகிச்சை அளித்து, வென்டிலேட்டா் உதவியுடன் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாம்.

இதனிடையே, தேவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறிய உறவினா்கள், அவரது உடலை ஒப்படைக்குமாறு கோரினா். மருத்துவமனை நிா்வாகம் மீதிக் கட்டணம் செலுத்துமாறு கூறியதாம்.

இதையடுத்து, பிற்பகல் 2.30 மணியளவில் மருத்துவமனை முன் திரண்ட சுமாா் தேவியின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த துறைமுகம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்களுடன் பேச்சு நடத்தினா். இதையடுத்து, மருத்துவமனை நிா்வாகம் மேற்கொண்டு பணம் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவித்தது. தொடா்ந்து, தேவியின் உடல் அவரது கணவா் செல்வம் மற்றும் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.