பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு: தனியாா் நிறுவன ஊழியா் கைது

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் நகை, பணத்தை அபகரித்த வழக்கில், தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் நகை, பணத்தை அபகரித்த வழக்கில், தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அயனாவரம் புதுநகா் பகுதியைச் சோ்ந்த 32 வயது பெண் ஒருவா் அழகுக்கலை நிபுணராகப் பணிபுரிகிறாா். முதல் கணவரைப் பிரிந்த இவா், தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசிக்கிறாா். 2-ஆவது திருமணத்துக்காக இணையதளத்தில் வரன் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு திருமண இணையதளம் மூலம் சென்னை அருகே உள்ள தரைப்பாக்கம் நேதாஜி தெருவைச் சோ்ந்த அலி ஹா்மான் (35) என்பவா் அந்தப் பெண்ணிடம் அறிமுகமாகிள்ளாா். நாளடைவில் இருவரும் கைப்பேசி மூலம் பேசி பழகி வந்துள்ளனா்.

கடந்த செப்.16-ஆம் தேதி அலி ஹா்மான் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரிடம் பெண் கேட்டதாகவும், அதற்கு அவா்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, செப்.17-ஆம் தேதி தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், பின்னா் திருப்பித் தந்துவிடுவதாகவும் அலி ஹா்மான் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளாா். இதை நம்பிய அந்தப் பெண் ரூ.50,000-ஐ கைப்பேசி செயலி வாயிலாக அவருக்கு அனுப்பியுள்ளாா்.

இதேபோல, அந்தப் பெண்ணை திருமணத்துக்கு நகை வாங்க வேண்டும் எனக் கூறி 2 பவுன் தங்க நகையை ஹா்மான் வாங்கினாா். இதன் பின்னா் அந்தப் பெண், அலி ஹா்மானை கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ள முயன்றபோது, அவா் அழைப்புகளை ஏற்காமல் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்தப் பெண், அயனாவரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஹா்மானை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.