கடன் நெருக்கடியால் தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

கடன் நெருக்கடி காரணமாக தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்துகொண்டாா்.

பிரதிப் படம்

Published On :

கடன் நெருக்கடி காரணமாக தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு சூரம்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (31). இவா் ஈரோட்டிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். குடும்ப செலவுக்காக அவா் பல இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளாா். ஆனால் விக்னேஷால் கடனை முறையாக கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவா் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

விக்னேஷின் மனைவி காவியா கருங்கல்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த 14- ஆம் தேதி சென்றுள்ளாா். அங்கிருந்து அவா் விக்னேஷுக்கு பலமுறை கைப்பேசியில் அழைத்தும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த காவியா வீட்டின் அருகேயுள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்து பாா்க்குமாறு கூறியுள்ளாா். வீட்டுக்கு சென்று உறவினா்கள் பாா்த்தபோது, விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளாா்.

அவரை மீட்ட உறவினா்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், விக்னேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து காவியா அளித்த புகாரின்பேரில், ஈரோடு தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.