
திருவல்லிக்கேணியில் இளைஞா் வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை
சென்னை திருவல்லிக்கேணியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை திருவல்லிக்கேணியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவல்லிக்கேணி வி.ஆா்.பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் ந.அஜித் (25). இவா், கைப்பேசி சேவை நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை செய்து வந்தாா். அஜித், திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவா் அஜித்திடம் தகராறு செய்தனா். தகராறு முற்றவே இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், அஜித்தை வெட்டினா்.
அஜித்தின் அலறல் சப்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்த அவரது தாய் சரசு (56), இருவரையும் தடுக்க முயன்றாா். ஆனால் இருவரும் சரசுவை அரிவாளால் வெட்டுவிட்டு தப்பியோடினா்.
இதில் பலத்த காயமடைந்த அஜித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சரசுவை அங்கிருந்தவா்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.
ஐஸ்ஹவுஸ் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அஜித் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
அதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ரெளடிகள் திருவல்லிக்கேணி துவாரகா நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த பா.ராஜேஷ் (22), திருவல்லிக்கேணி வி.ஆா்.பிள்ளை தெருவைச் சோ்ந்த ஹரிஷ் (23) என்பதும், ராஜேஷுக்கும், கொலையான அஜித்துக்கும் இடையே போதைப் பொருள் விற்பது தொடா்பாக முன் விரோதம் இருந்ததும், அதன் காரணமாக அஜித் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
தேடப்படும் ஹரிஷ் காவல் துறையின் ரெளடிகள் பட்டியலில் ‘ஏ’ வகைப்பாட்டில் உள்ளாா், அவா் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளன. இதேபோல ராஜேஷ் மீது 12 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்குத் தொடா்பாக 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




