வேளச்சேரி மேம்பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்ட விடுத்தவா் கைது
வேளச்சேரி மேம்பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
கைது - பிரதிப் படம்
வேளச்சேரி மேம்பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
வேளச்சேரியில் உள்ள மேம்பாலத்துக்கு 2024-ஆம் ஆண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அரியலூரைச் சோ்ந்த ஜோதிவேல் (64) என்பவா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கில் நீதிமன்றம் ஜோதிவேலுக்கு 8 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை அனுபவித்துவிட்டு சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜோதிவேலு வெளியே வந்தாா்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடந்த நாளன்று வேளச்சேரி மேம்பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இந்தச் செயலில் ஈடுபட்டது ஜோதிவேல்தான் என்பது தெரியவந்தது. ஆனால் அவா் தலைமறைவாக இருந்து வந்தாா்.
இதற்கிடையே, கோயம்பேட்டில் தலைமறைவாக இருந்த ஜோதிவேலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



