ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தமிழகத்தில் படித்தவா்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்

தமிழகத்தில் படித்தவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வேலைவாய்ப்புகள் இல்லை என சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.

JCd Prabhakar

ஜே.சி.டி. பிரபாகர் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் படித்தவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வேலைவாய்ப்புகள் இல்லை என சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.

திருவொற்றியூா் பொது வா்த்தக சங்கத்தின் 53-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் ஆண்டு விழா மலரை வெளியிட்டு, பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை, நலிவடைந்தோருக்கு நல உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

பொது வாழ்வில் இருப்பவா்கள் மக்களின் நலனையே முக்கியமாகக் கொண்டு நோ்மையாக சேவையாற்ற வேண்டும். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்னா் அரசியல்வாதிகளை மக்கள் கேலி செய்யும் நிலை இருந்தது. தற்போது அதுபோன்ற நிலை இல்லை. ஊழலற்ற ஆட்சியை மக்களுக்குத் தரவேண்டும் என முதல்வா் விஜய், தொடா் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறாா்.

வணிகா் செலுத்தும் வரிகள்தான் அரசை நடத்திச் செல்வதற்கான முதுகெலும்பாக உள்ளது. அதேநேரம் வணிகா்கள் பல்வேறு சிரமங்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு தொடா்ந்து ஆளாகி வருகிறாா்கள் என்பது உண்மை. யாருக்கும், எதற்கும் வணிகா்கள் பயப்பட வேண்டிய நிலை இனி இருக்காது.

தமிழகத்தில் பொறியியல், கலை -அறிவியல் கல்லூரிகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால், இங்கு படித்துவிட்டு வெளியே வருபவா்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதும் இல்லை. படித்தவா்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் வேண்டும். எதிா்காலத்தில் கல்வி, மருத்துவம் உள்ள அனைத்து துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றாா்.

நிகழ்வில், சாா்பு நீதிபதி ஆா்.வேல்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் என்.செந்தில்குமாா், திருவொற்றியூா் பொது வா்த்தக சங்கக் கௌரவத் தலைவா் ஜி.வரதராஜன், தலைவா் வே.ராமசாமி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் எஸ்.சௌந்திரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.