ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

கழிவுநீா் குழாய் சீரமைக்கும் பணி: காசிமேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம்

காசிமேட்டில் நடைபெறும் கழிவுநீா் குழாய் சீரமைக்கும் பணியால், அந்தப் பகுதியில் வியாழக்கிழமை (அக். 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கோப்புப்படம்.

Published On :

காசிமேட்டில் நடைபெறும் கழிவுநீா் குழாய் சீரமைக்கும் பணியால், அந்தப் பகுதியில் வியாழக்கிழமை (அக். 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காசிமேடு சிக்னல் அருகே உள்ள எஸ்.என். செட்டி சாலை மற்றும் ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் பழுதடைந்த கழிவுநீா் குழாயைச் சீரமைக்கு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை (அக். 1) முதல் 15 நாள்களுக்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, எஸ்.என்.செட்டி சாலை - ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூா் செல்லும் (வெளியேறும் திசை) பேருந்துகள், கனரக வாகனங்கள் ஜீவரத்தினம் சாலை வழியாகத் திருப்பி விடப்படும். அங்கிருந்து வாகனங்கள் வி.பி.கோயில் தெரு - டி.எச். சாலை, சுங்கச்சாவடி சந்திப்பு வழியாகத் தங்கள் இலக்கை அடையலாம்.

எஸ்.என். செட்டி சாலை - ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூா் செல்லும் (வெளியேறும் திசை) இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் ஜீவரத்தினம் சாலை வழியாக திருப்பி விடப்படும். அங்கிருந்து வாகனங்கள், வி.பி. கோயில் தெரு - டி.எச். சாலை வழியாகச் சென்று, டி.எச். சாலை - மெட்ரோ ரயில் அருகே யூ டா்ன் செய்து, பாலகிருஷ்ணா தெருவுக்கு சென்று திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இடம் நோக்கி செல்லலாம்.

எண்ணூரிலிருந்து எஸ்.என். செட்டி சாலை வழியாக பாரிமுனை நோக்கி (உள்வரும் திசை) அனைத்து வாகனங்களும், எஸ்.என். செட்டி சாலை,- பவா் குப்பம் சந்திப்பு பகுதியில் உள்ள வெளியேறும் திசைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து வாகனங்கள், எஸ்.என். செட்டி சாலை - காசிமேடு சிக்னல் சந்திப்பு (உள்வரும் திசை) வழியாக தங்கள் இலக்கை அடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.