மாநில அளவில் கிளப் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மாநில அளவில் கிளப் அணிகளுக்கிடையே துரைசாமி நினைவுக் கோப்பை கூடைப்பந்து போட்டி நுங்கம்பாக்கம் மாநகராட்சி மைதானத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 24 கிளப் அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி கிளப் அணியும், அன்புஜான் கிளப் அணியும் மோதின.
இதில் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி கிளப் அணி வெற்றி பெற்று துரைசாமி நினைவுக் கோப்பையைக் கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணியினரை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குனர் மரியவில்சன் பாராட்டி பரிசு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.