மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்:சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம்

காஞ்சிபுரத்தில் சிறிய மழை பெய்தாலே நரசிங்கராயர் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

Published On :

காஞ்சிபுரத்தில் சிறிய மழை பெய்தாலே நரசிங்கராயர் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

இந்தச் சாலை வழியாக பிள்ளையார்பாளையம், இரட்டை மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த வழியாக வந்து செல்வது வழக்கம். மேலும், இங்கு ஒரு அரசு உதவி பெறும் பள்ளியின் விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது. இதனால் மாணவர்கள் இந்த வழியாக விளையாட்டு மைதானத்துக்குச் செல்வது வழக்கம். இது போன்ற முக்கிய சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழைக்கு குளம்போல மழைநீர் தேங்கி நின்றது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சிறிய மழை பெய்தாலே நரசிங்கராயர் தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கிவிடும். முறையான மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாததாலே, இப்பகுதி மக்கள் இந்த மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இந்த மழைநீர் வடிய ஓரிரு நாள்கள் ஆகிவிடும்.

இதனால் இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதைப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.