பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு: ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி நேரில் சென்று வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் இரா.கஜ

லட்சுமி நேரில் சென்று வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் இரா.கஜலட்சுமி ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் பேசியதாவது:

பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 14,759 ஆண்கள், 17,466 பெண்கள் என மொத்தம் 32,225 மாணவ, மாணவிகளும், காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 5,739 ஆண்கள், 6,318 பெண்கள் என மொத்தம் 12,057 மாணவ, மாணவிகளும் தேர்வை எழுதுகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 44,282 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் தனித் தேர்வர்களாக 1,696 பேர் எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 45,978 பேர் தேர்வை எழுதினர். இத்தேர்வு 110 மையங்களில் நடைபெற்றது.

தேர்வுப் பணியில் வினாத்தாள் கட்டுக்காப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், காவலர்கள் என மொத்தம் 3,432 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வினாத்தாள் மையத்துக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

91 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 29 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 61 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத கூடுதலாக 1 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய மாற்றுத்தினாளி மாணவர்கள் 29 பேரில், 19 மாணவர்கள் தாங்கள் கூற ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். 10 மாணவர்கள் கூடுதல் நேரம் கேட்டு தாங்களாகவே எழுதினர்.

இவர்களுக்கு ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கீழ்த்தளத்தில் தனிதேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.