காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தை (சிவில்) சேர்ந்த வழக்குரைஞர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் அர்ஜுனன், நிர்வாகிகள் வேல்முருகன், ராஜவேல், பெருமாள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் நடராஜ் வழக்குரைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு வழக்குரைஞர்கள் கலைந்து சென்றனர். இதனால், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!

7/32: காங்கோவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



