வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கிராம சபைக் கூட்டம்: நன்மங்கலத்தில் தமிழிசை பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம் நன்மங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (மே 1) நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்கவுள்ளார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:24 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் நன்மங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (மே 1) நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்கவுள்ளார்.
இது குறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் கிராம நிர்வாகம் முடங்கியுள்ளது. கிராம மக்களுக்கு நேரடி நிர்வாகத்தைக் கொடுக்க முடிவது உள்ளாட்சி நிர்வாகம் என்ற காரணத்தால் இன்று பஞ்சாயத்து ரீதியில் பல கிராம ரீதியாக பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
எனவே, செவ்வாய்க்கிழமை (மே 1) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தை பகுதி மக்களின் பிரச்னைகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பரங்கிமலை ஒன்றியத்தில் உள்ள நன்மங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பார்வையாளராகப் பங்கேற்க உள்ளேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.