காஞ்சிபுரம் அடுத்த வேடல் பகுதியில் டிராக்டர் மோதி விவசாயி உயிரிழந்தார். இது குறித்த விவரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாமோதரன் (47), மகேந்திரன் (25). விவசாயிகளான இருவரும் செவ்வாய்க்கிழமை காலை காஞ்சிபுரத்திலிருந்து ஆற்பாக்கத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் - உத்தரமேரூர் சாலையில் வேடல் கிராமம் அருகே வந்தபோது, ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர், அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், தாமோதரன் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த மகேந்திரனும் படுகாயமடைந்தார். இது தொடர்பாக, மாகரல் போலீஸாருக்கும், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் அப்பகுதியினர் தகவல் அளித்தனர். அதன்பேரில்,சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தாமோதரனின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மகேந்திரனை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாகரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









