அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

நம்மாழ்வார் நினைவு நாள்: மிதிவண்டி பிரசார பயணம்

மறைந்த இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வாரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வானரகம் நோக்கி சென்ற

News image

மதுராந்தகத்தில் வரவேற்பு அளித்த மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் துரை பிருதிவிராஜ் (இடது).

Updated On :26 டிசம்பர் 2018, 3:13 am IST

மறைந்த இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வாரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வானரகம் நோக்கி சென்ற மிதிவண்டி பிரசாரக் குழுவினருக்கு மதுராந்தகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நம்மாழ்வாரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் நஞ்சில்லா வேளாண்மை, பனை மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் புறக்கணிப்பு, மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்துதல், பன்னாட்டு விற்பனைப் பொருள்களை புறக்கணித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பனை சதீஷ் தலைமையில் மக்கள் சந்திப்பு பிரசாரக் குழுவினர் மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு மதுராந்தகத்தில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரை பிருதிவிராஜ், இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடப் பெருமாள், இயற்கை ஆர்வலர் கம்சலாபுரம் திருவேங்கிடம், ஓவியர் சினேகலதா உள்பட பலர் கலந்து கொண்டனர். மிதிவண்டி குழுவினர்களான மா.மீனாட்சி சுந்தரம், பிரசாந்த், விஷ்ணுப்ரியன், திருவேங்கிடம் உள்பட பலரும் கலந்து கொண்டனர். அதையடுத்து மதுராந்தகத்தில் இருந்து மிதிவண்டிக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் வழியாக பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் சந்திப்பு உரிமைகள் பாதுகாப்புக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.