முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

செங்கல்பட்டில் 10 நாள் புத்தகத் திருவிழா: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு பாரதியார் மன்றம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 3-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

News image

செங்கல்பட்டில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்துப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா.

Updated On :26 டிசம்பர் 2018, 3:18 am IST


செங்கல்பட்டு பாரதியார் மன்றம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 3-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கல்பட்டு பாரதியார் மன்றம் சார்பில் செங்கல்பட்டில் கடந்த இரு ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி ஜிஎஸ்டி சாலை கிருஷ்ண மஹாலில் பாரதியார் மன்றத் தலைவர் க.அரி தலைமையில் நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர் என்.மாதவன், கல்பாக்கம் அணுமின் நிலைய மேலாண்மை இயக்குநர் எஸ்.வேல்முருகன், சென்னை அணுமின் நிலைய இயக்குநர் ஆர்.சத்தியநாராயணா, மாவட்ட மத்திய நூலகர் க.மந்திரம், அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன்
உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புத்தகத் திருவிழாவையும், குழந்தைகளுக்கான கோளரங்கையும் காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்ûனையா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 
புத்தகத் திருவிழா வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான கோளங்கத்துக்குள், வானில் உள்ள நட்சத்திரங்களை குழந்தைகள் அருகில் பார்க்கும் வகையில் உருவாக்கப்படுள்ளன. இதனால் குழந்தைகள் இந்தக் கோளரங்கத்தை ஆர்வத்துடன் பார்த்து வியந்தனர். புத்தகத் திருவிழாவில் 35-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் தங்கள் வெளியீடுகளை காட்சிப்படுத்தியுள்ளனர். 
முன்னதாக, புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி செங்கல்பட்டு ராட்டினங்கிணறு ஜிஎஸ்டி சாலையில் இருந்து புறப்பட்டது. பேரணியில் பங்கேற்றவர்கள் புத்தக வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், பதாகைகளையும் கையில் ஏந்தியபடி கோஷமிட்டுச் சென்றனர். இப்பேரணியில் பாரதி, நேரு, அப்துல் கலாம், ஒளவையார், விவேகானந்தர் உள்ளிட்டவர்களின் வேடமணிந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.