முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாள் விழா காஞ்சிபுரம், உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம், பூக்கடைச்சத்திரம், சின்ன காஞ்சிபுரம், ஆதிசங்கரர் நகர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மலர் தூவி, தீபாராதனை காண்பித்து பாஜகவினர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாஜக நகர தலைவர் ஜெகதீசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் செய்யப்பட்டது.
இதனிடையே, உத்தரமேரூர் பஜார் வீதியில் வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை எளியோருக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், பாஜக நகர தலைவர் பிரேம்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜவேலு உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


