சுமை தூக்கும் தொழிலாளர் பணியிடங்களுக்கு பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரிசி ஆலையில் சுமை தூக்கும் தொழிலாளர் காலிப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

அரிசி ஆலையில் சுமை தூக்கும் தொழிலாளர் காலிப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு காரீப் பருவத்துக்கு, நவீன அரசி ஆலையில் தாற்காலிக சுமை தூக்கும் தொழிலாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 18 வயது பூர்த்தி அடைந்து, 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் அவசியம். 
விருப்பமுள்ளவர்கள், தங்களது கல்விச் சான்று, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, வயது உறுதிச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பல்லவன் நகர், வந்தவாசி சாலை, காஞ்சிபுரம்-631501 என்ற முகவரிக்கு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com