காஞ்சிபுரம் ராமசாமி கோயில் மண்டபத்தால் சின்ன காஞ்சிபுரம் கிளை நூலகம் ஆபத்தில் சிக்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட நூலகம் செங்கல்பட்டில் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, ரங்கசாமி குளம் அருகேவுள்ள சின்னகாஞ்சிபுரம் நூலகம், ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள நூலகம், பிள்ளையார் பாளையம் சிஎஸ் தெருவில் உள்ள நூலகம் என 3 கிளை நூலகங்கள் செயல்படுகின்றன. அதேபோல், ஓரிக்கை, செவிலிமேடு, திருக்காலிமேடு ஆகிய பகுதிகளில் ஊர்ப்புற நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
63 ஆண்டு கிளை நூலகம்: இதில், சின்ன காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்தையொட்டி அறிஞர் அண்ணா கிளை நூலகம் கடந்த 1955 முதல் 63 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, 1962, 2002 ஆகிய ஆண்டுகளில் இந்த நூலகத்துக்கு இரண்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன.
13 ஆயிரம் உறுப்பினர்கள்: நாள்தோறும் சுமார் 25க்கும் மேற்பட்ட நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் படிப்பதற்காக சுமார் 300க்கும் மேற்பட்டோர் நூலகத்துக்கு வந்து செல்கின்றனர். அதேபோல், இலக்கியம், அறிவியில், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் அடங்கியிருக்கும் தனிப்பிரிவு உள்ளது. இதன்மூலம், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நூல்களை பெற்று படித்து பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, நாளிதழ் வாசிப்பு, உறுப்பினர்களுக்கென தனித்தனியாக 3 பிரிவுகள் உள்ளன.
போட்டித் தேர்வுக்கு சிறப்புப் பிரிவு: அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்நூலகத்துக்கு வந்து சென்ற சிறப்பு உள்ளது. அதன்பேரிலேயே இந்நூலகத்துக்கு அறிஞர் அண்ணா நூலகம் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நூலகத்தில் பயின்று பல்வேறு போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் திரளானோர் தேர்ச்சி பெற்றும், அரசுப்பணிகளில் உயர் பதவிகளையும் வகித்து வருகின்றனர். அத்துடன், அண்மையில் தமிழக முதல்வர் ரூ.1.50 கோடியில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் போட்டித் தேர்வுக்கென தனிப்பிரிவு கட்டடம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதில், சின்ன காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா கிளை நூலகம் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயில் மண்டபத்தால் ஆபத்து: இந்நிலையில், நாள்தோறும் நூலகத்துக்கு உறுப்பினர்கள், வாசிப்போர் என பலரும் வந்து செல்லும் இடமாக கிளை நூலகம் விளங்கி வருகிறது. ஆனால், நூலகவாசிகள் கடந்த சில மாதங்களாக அச்சத்துடனே நூலகத்துக்கு வந்து செல்வதாக புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு நூலகத்தையொட்டியுள்ள பாழடைந்த கோயில் மண்டபமே காரணமாக உள்ளது.
இதுகுறித்து கிளை நூலக அலுவலர் கூறியது:
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அறிஞர் அண்ணா கிளை நூலகம் சின்ன காஞ்சிபுரம் பகுதயில் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும், நாளிதழ் வாசிப்பதற்கு வாசகர்களும், நூலக உறுப்பினர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நூலகத்தையொட்டி பாழடைந்த கோயில் மண்டபம் உள்ளது. இக்கோயில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில் மண்டபத்தின் சுவர்கள் சிதிலமடைந்தும், பெருமரங்கள் வளர்ந்தும், முறையாகப் பராமரிப்பின்றி ஆபத்தான முறையில் காணப்படுகிறது. அதிலும், கோயில் மண்டப சுவர்களிலிருந்து வெளியில் நீண்டிருக்கும் கருங்கற்கள் ஆபத்தான முறையில் உள்ளன. இதனால், எப்போது வேண்டுமானாலும் இக்கோயில் மண்டபச் சுவர்கள் சரிந்து விழுந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நூலகத்துக்கு வருவோர் அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.
தமிழக முதல்வர் அண்மையில் குடிமைப்பணி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கென தனிப்பிரிவு கட்டடம் அமைப்பது தொடர்பாக அறிவித்திருந்தார். இதற்கு இந்நூலகம் தற்போது தேர்வாகியுள்ளது. அதற்கான ஆய்வும் நடைபெற்று வருகிறது. இக்கோயில் மண்டப சுவர் ஆபத்தால் போட்டித் தேர்வு தனிப்பிரிவுக்கான பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறைக்கு பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால், ஒருசில அலுவலர்கள் வந்து பார்த்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அலுவலர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கோயில் மண்டபம் சிதிலமடைந்தது குறித்து புகார் வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு நேரில் சென்று பார்த்ததில் கோயில் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இது உண்மைதான். இதுதொடர்பாக, உரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

