6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

எண்ணியதைத் தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருந்தால் உயர் லட்சியத்தை அடையலாம்: ஆட்சியர் அறிவுரை

வாழ்வின் இலக்கை அடைவதற்கு எண்ணியதைத் தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என ஆட்சியர் பொன்னையா மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

News image

விழாவில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி வழங்கிய ஆட்சியர் பொன்னையா.

Updated On :29 மார்ச் 2018, 10:49 pm

வாழ்வின் இலக்கை அடைவதற்கு எண்ணியதைத் தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என ஆட்சியர் பொன்னையா மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கலந்துகொண்டார். அப்போது, தேசிய ஹாக்கி போட்டியில் கலந்துகொண்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பரணி நாகவேலுக்கும், நீச்சல் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கும் ரூ.10 ஆயிரமும், கல்லூரியின் விளையாட்டு மேம்பாட்டு நிதியாக ரூ. 25 ஆயிரமும் சேர்த்து ரூ. 35 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். 
பின்பு, அவர் பேசியதாவது: நாட்டின் சமூக வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் பெண் கல்வி முக்கியமானது. இதனால்தான், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய பெண் கல்வி மிகவும் இன்றியமையாதது. ஒவ்வொரு மாணவியும் காந்தியடிகள், விவேகானந்தர் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றைப் பின்பற்றவேண்டும். அதன்படி, பொது சிந்தனையுடன் செயல்பட்டு, சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும். மேலும், ஒவ்வொரு துறையிலும் கல்பனா சாவ்லா போன்று முதன்மையான பெண்களாக விளங்கி, நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபடவேண்டும். வள்ளுவரின் வாக்கிற்கிணங்க 'எண்ணியதை எண்ணியாங்கு எய்துவர்..' என்ற திருக்குறளின் வரிகளைப்போல், பெண்கள் வாழ்வின் இலக்கை அடைவதற்கு, எண்ணியதை தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருந்தால் உயர் லட்சியத்தை அடையலாம். மேலும், கல்லூரி அரங்கம் கட்டி முடிப்பதற்கு அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன், நிதி அறங்காவலர் ராமநாதன், உறுப்பினர் செயலர் துரைமோகன், கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி, பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.