ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்வதில் எழுந்த புகாரையடுத்து ரேஷன் கடையை காஞ்சிபுரம் எம்எல்ஏ-வும், பொதுமக்களும் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த விவரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதி திருவேகம்பன் தெருவில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடை உள்ளது. திருவேகம்பன், திருமேலீஸ்வரர் கோயில் தெருக்களைச் சேரந்த சுமார் 900 மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்தக் கடையில் பொருள்களை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைக்கு பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அக்கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்கியபோது, எடை குறைவாக விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து மக்கள் கேட்டபோது, ஊழியர்கள் தகாத வார்த்தையில் பேசியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியினர் ரேஷன் கடையை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். அதோடு, தொகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், தொகுதி எம்எல்ஏ எழிலரசன் அந்தக் கடைக்கு நேரில் வந்து புகார் குறித்து ஆய்வு செய்தார். ஆனால், அந்த ஆய்வுக்கும் ஊழியர்கள் உடன்படவில்லை. எம்எல்ஏ-வை யாரென்றே தெரியவில்லை என்று அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
இதனால், கோபமடைந்த எம்எல்ஏ மற்றும் அப்பகுதியினர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சிவகாஞ்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சமரசம் செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து, ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் எனக்கூறி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல் அறிந்து குடிமைப்பொருள் வழங்கல் துறை தனி வட்டாட்சியர் கோ.சித்ரா, கூட்டுறவுத் துறை அலுவலர்கள் ரேஷன் கடைக்கு வந்து, ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தனர். அதன்பிறகு, எம்எல்ஏ-வும், பொதுமக்களும் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல்! அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


