பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

அங்கன்வாடி மையம் திறப்பு

செரப்பனஞ்சேரி ஊராட்சியில் ரூ.8.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :9 அக்டோபர் 2018, 4:17 am IST


செரப்பனஞ்சேரி ஊராட்சியில் ரூ.8.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செரப்பனஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. குன்றத்தூர் ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி விழாவுக்குத் தலைமை வகித்து கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதில் முன்னாள் கல்வி குழுத் தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பெருமாள், ஏழுமலை, பஞ்சா, மணி, முருகன், வேலு, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.