15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள்: முதல்நிலை சரிபார்க்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணியை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை நேரில் ஆய்வு

News image

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் ஆட்சியர்.

Updated On :9 அக்டோபர் 2018, 4:19 am IST


வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணியை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, புதியதாகத் தயாரிக்கப்பட்ட 10,170 எம்-3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவை பெல் நிறுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்டு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணியானது, ஆட்சியர் தலைமையில், பெல் நிறுவனப் பொறியாளர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு 60 நாள்களுக்கு முன்பு இரண்டாம் நிலை சரிபார்த்தல் பணியும், தேர்தலுக்கு முன் மூன்றாம் கட்ட சரிபார்த்தல் பணியும் நடைபெறவுள்ளன. 
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் ராஜு, நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் காஞ்சனா மாலா, தனி வட்டாட்சியர் வாசுதேவன், அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.