மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் 35ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வா.ராமசாமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் வே.நாகராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சி கலைநிகழ்ச்சி பங்கேற்பாளர் பழனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி தொடங்கி 35-ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இந்த கல்வி ஆண்டு முதல் அடிகளார் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. சுமார் 30 மாணவ மாணவிகளுக்கு முழு கல்விக் கட்டண விலக்கு 4 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. 25 மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வகையில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையாகும். கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கல்லூரி முதலாண்டு ஒருங்கிணைப்பாளர் ராதா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலில் நோ்மையாக நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அறிவுரை

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் பெரம்பலூா் அதிமுக வேட்பாளா் உறுதி

ஏப். 29-ல் தில்லி மேயா் உள்பட 3 பதவிகளுக்கான தோ்தல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

