சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ரூ. 40 லட்சத்தில் ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்

தனியார் அறக்கட்டளை சார்பாக ரூ. 40 லட்சத்தில் செரப்பனஞ்சேரி பெரிய ஏரி தூர்வாரும் பணியை ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் 

News image

ஏரி  தூர்வாரும்  பணியைத் தொடங்கி வைத்த  எம்எல்ஏ கே.பழனி.

Updated On :3 செப்டம்பர் 2018, 9:42 pm

தனியார் அறக்கட்டளை சார்பாக ரூ. 40 லட்சத்தில் செரப்பனஞ்சேரி பெரிய ஏரி தூர்வாரும் பணியை ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் 
கே.பழனி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செரப்பனஞ்சேரி ஊராட்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரியின் நீர்தான் செரப்பனஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், அபினவ தீர்த்தம் அறக்கட்டளை சார்பாக ரூ.40 லட்சம் மதிப்பில் இந்த ஏரியில் உள்ள கோரைப்புற்களை அகற்றி, தூர்வாரி கரையை பலப்படுத்தவும், கரைகளில் மரக்கன்றுகள் நடவும், ஏரியைச் சுற்றிலும் எல்லைக்கற்கள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
அதன்படி, ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செரப்பனஞ்சேரி ஏரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி பங்கேற்று, தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.