அச்சிறுப்பாக்கத்தில் நிதி நிறுவன மோசடியை கண்டித்து பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் அச்சிறுப்பாக்கத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தினர் அப்பகுதி மக்களிடம் மாதம் ரூ.500 வீதம் 60 மாதங்களுக்கு சீட்டுப் பணம் வசூலித்து வந்தனர். இதை நம்பிய கிராம மக்கள் முழுதொகையும் செலுத்தினர். ஆனால், சொன்னபடி நிறுவனத்தினர் ரூ.45 ஆயிரம் தராததுடன், கட்டிய பணத்தையும் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அச்சிறுப்பாக்கம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தபின்னர் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


