சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஜவ்வாதுமலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்

ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 ஜனவரி 2019, 4:12 am IST


ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதுகுறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியது:
நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சோந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
நானும், காணிநிலம் மு.முனிசாமி, மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறைப் போராசியர் ரே.கோவிந்தராஜ் ஆகியோரும் மேற்கொண்ட கள ஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது.
இது 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவத்தைப் பார்க்கும் போது மலை நாட்டில் வாழ்ந்த இனக்குழுத் தலைவனாக இருக்க வேண்டும். இடது கையில் வில்லும், வலது கையில் நீண்ட வாளும் உள்ளது.
இடைக் கச்சில் குறுவாள் சித்தரிக்கப்பட்டிருக்கும். 
ஆனால் இங்கு நீண்ட வாள் இருப்பது இவ்வீரன் இனக்குழுத் தலைவன் என்பதைத் தெரியப்படுத்துகிறது. மேலும், இவ்வீரனின் வீரத்தையும், நாட்டுக்காக உயிர்விட்ட தியாகத்தையும் வெளிப்படுத்துகிறது. பகைவர்கள் விட்ட அம்புகளில் ஒன்று வீரனின் கழுத்துப் பகுதியிலும் மற்றொரு அம்பு மார்பின் கீழ்ப் பகுதியிலும் பாய்ந்துள்ளதை இந்த நடுகல் விளக்குகிறது.
வீரத்தோடு இவ்வீரன் போரிட்டு மாண்டதை விளக்குகிறது.
இவ்வீரன் எதற்காக இறந்தான் என்பதை, வீரனின் காலுக்கு அடியில் உள்ள ஆறு மாடுகளின் சிற்பம் விளக்குகிறது. இவ்வீரனின் ஊர் மாடுகளை (ஆநிரைகள்) எதிரி நாட்டார் கவர்ந்து செல்ல, அவற்றை மீட்கும் பொருட்டு நடைபெற்ற போரில் இரண்டு அம்புகள் பாய்ந்து இவ்வீரன் உயிர் விட்டிருப்பது தெரிகிறது. எழுத்துக்கள் அழகாக கோடிட்டு எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு வாசகம் வருமாறு:
நெல்வா
இல்உடைய
உலாடக்கி.ஏறை
ஊ(ர்) அழியபட்டா(க்) சித்திர வில்
கன்நாடு மாரதவ(ய) 
மான்கிவு கழ்பெருமா-
என்று கல்வெட்டு முடிகிறது.
1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்ச் சமூகத்தோடு மாடுகள் இரண்டறக் கலந்திருந்த சிறப்புகளைக் கொண்ட மாடுகளின் சித்திரங்கள் மாட்டுப் பொங்கலோடு கொண்டிருந்த தொடர்பை வெளிப்படுத்துகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.