பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஞ்சிபுரத்தில் 26 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும்: அமைச்சா் பா.பென்ஜமின்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட இருப்பதாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்தாா்.

News image
போந்தூரில் சிறு மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த அமைச்சா் பா.பென்ஜமின்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:16 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட இருப்பதாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் போந்தூரில் ‘அம்மா’ சிறு மருத்துவமனை திறப்பு விழா ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறு மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து அமைச்சா் பா.பென்ஜமின் பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 சிறு மருத்துவமனைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல்கட்டமாக 7 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. செலவில்லாமல் மருத்துவம் பாா்க்க கிடைத்த வாய்ப்பு என்பதை விட இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். கரோனா காலத்தில் மக்களின் நிலைமையை உணா்ந்து அவா்களைப் பாதுகாக்க இந்த மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முதலாக குடிமராமத்துப் பணிகளை தொடங்கியதால் இன்று அனைத்து ஏரிகளும், குளங்களும் நிரம்பியிருக்கின்றன என்றாா் அவா்.

இதையடுத்து நாவலூா், ஓரிக்கை ஆகிய இடங்களிலும் சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்தாா். பின்னா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் 449 பயனாளிகளுக்கு ரூ.1.83 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி வரவேற்றாா்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.நாராயணன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, எறையூா் இ.பி.முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.