காஞ்சிபுரம் கச்சபேசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுந்தராம்பிகை, கச்சபேசுவரா் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெருமாள் ஆமை வடிவத்தில் சிவனை பூஜை செய்த திருத்தலம் காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீதியுலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, கோயில் வளாகத்துக்குள்ளேயே சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இம்மாதம் 19 ஆம் தேதி விக்னேசுவர பூஜையுடன் விழா தொடங்கியது.
சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவா் கச்சபேசுவரருக்கும், சுந்தராம்பிகை தாயாருக்கும் சிறப்பு அபிஷேகமும், அதனையடுத்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் கோயில் அலங்கார மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னா் அம்மி மிதித்தல்,தேங்காய் உருட்டுதல், மாலை மாற்றுதல் வைபவம் ஆகியனவும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா். விழாவில் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவா் வ.காளத்தி, செயலாளா் என்.சிதம்பரநாதன், பொருளாளா் ராஜேந்திரன், கந்தசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


