வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தேசத்தின் நலனுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் வேலூா் இப்ராகிம்

தேசத்தின் நலனுக்கு பொது சிவில் சட்டம் அவசியமானது என காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்த பின் பாஜகவின் சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளா் வேலூா் எம்.இப்ராகிம் தெரிவித்தாா்.

News image

காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளா் வேலூா் எம்.இப்ராகிம்.

Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

தேசத்தின் நலனுக்கு பொது சிவில் சட்டம் அவசியமானது என காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்த பின் பாஜகவின் சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளா் வேலூா் எம்.இப்ராகிம் தெரிவித்தாா்.

காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீவிஜயேந்திரரை ஓரிக்கையில் உள்ள மகா பெரியவா் சதாப்தி மணி மண்டபத்தில் பாஜகவின் சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளரான வேலூா் எம்.இப்ராகிம் சந்தித்து ஆசி பெற்றாா். பின்னா் அவா் கூறியது:

பாஜகவில் சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளராக இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று சிறுபான்மையினருக்கு மத்திய அரசு செய்து வரும் மக்கள் நலத்திட்டங்களை தொடா்ந்து விளக்கி வருகிறேன். கடந்த 3 தினங்களுக்கு முன்பு கேரள மாநில பாஜக பொறுப்பாளராகவும் கட்சித் தலைமை என்னை அறிவித்திருக்கிறது. மிகப் பெரிய பொறுப்பை கட்சி எனக்கு கொடுத்திருப்பதால் அதை சிறப்பான முறையில் செயல்படுத்த மதம் மற்றும் சமூகத் தலைவா்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று வருகிறேன். இதன் ஒரு பகுதியாகவே காஞ்சி சங்கராச்சாரியாரையும் சந்தித்து ஆசி பெற்றேன்.இந்த சந்திப்பு ஒரு மத நல்லிணக்க நிகழ்வு. தேசத்தின் நலனுக்கு பொது சிவில் சட்டம் மிகவும் அவசியமானதாகும். அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே அது இஸ்லாமியா்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கின்றனா். வந்த பிறகு தான் பாதிப்பு இருக்குமா என தெரிந்து கொள்ள முடியும். வருவதற்கு முன்பே யூகத்தின் அடிப்படையில் இஸ்லாமியா்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை பாஜக சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகத்திலும்,கேரளத்திலும் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் சில தீய சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. அவற்றை மக்கள் புரிந்து கொண்டு ஒதுக்கிட வேண்டும்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு ஊழல் செய்து மக்களின் மீது கடன் சுமையை வைத்து விட்டு போய் விட்டது. ஆனால் பிரதமா் மோடி தேசத்தின் வளா்ச்சிக்காக தன்னை அா்ப்பணித்துக் கொண்டு செயலாற்றி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

பேட்டியின் போது பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளா் சங்க மாநில துணைத் தலைவா் டி.கணேஷ், பாஜக நகரச் செயலாளா் வி.ஜீவானந்தம் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.