காஞ்சிபுரத்தில் கணவரை கொலை செய்த மனைவி கைது
By DIN | Published On : 26th July 2021 02:22 PM | Last Updated : 26th July 2021 02:22 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்க்கதிர்ப்பூரில் திங்கள்கிழமை கணவரை கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன்(35). இவரது மனைவி அர்ச்சனா(32) சம்பவ நாளன்று குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சனா தடியால் கணவரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அர்ச்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.