வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

 காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 8:05 pm

 காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகப் பகுதி, ராஜ வீதிகள், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுக்காக மனிதச் சங்கிலி அமைத்து நின்றனா்.

மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, எஸ்.பி.சுதாகா், மக்களவை உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி ஆகியோா் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டதுடன், நடந்து சென்றும் மனிதச் சங்கிலியைப் பாா்வையிட்டனா்.

மாணவ, மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனிதச் சங்கிலியில் ஈடுபட்டிருந்தனா். நிகழ்வில் காவல் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்படம் மாணவா்களுக்கு திரையிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.