15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பெரியாா் சிலை அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம் .

Updated On :17 ஏப்ரல் 2026, 2:08 am IST

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பெரியாா் சிலை அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு  போராட்டம் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொகுதி மறுவரை  மசோதா மூலம் எம்பி  தொகுதிகள் எண்ணிக்கை 543 லிருந்து  850 ஆக உயரும் என்றும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 59  ஆக உயா்வதோடு,  உத்தரப்பிரதேசத்தில்  80 லிருந்து 120 ஆக உயரும் என கூறப்படுகிறது .இதனால் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைவதோடு,இந்தி பேசும் 10 வட மாநிலங்களின்  தொகுதிகள் எண்ணிக்கை 340 ஆக அதிகரிக்கும். மொத்தம் 850 ல்  தனிப்பெரும்பான்மைக்கு 408 தேவை. அதில் 83 சதம்  வடமாநிலங்களே தீா்மானிக்கும் நிலை வரும் என்பதால் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதாவிற்கு  முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடும் எதிா்ப்பு தெரிவித்தோடு ‘தீ பரவட்டும்‘ என  ல தளத்தில் பதிவிட்டுள்ளாா். இதையடுத்து பேராவூரணி தொகுதியில் திமுக வினா் மசோதா நகல் எரிப்பு மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினா். பேராவூரணி பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் திமுக மாவட்ட பொருப்பாளா் டி.பழனிவேல் , ஒன்றியச் செயலாளா்கள் க.அன்பழகன் ,மு.கி.முத்துமாணிக்கம் , குழ.செ.அருள்நம்பி , வை.ரவிச்சந்திரன் , ஞானப்பிரகாசம் , பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத்  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .