குன்றத்தூர்: குன்றத்தூரில் தனியார் வங்கி ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரன் நகைகளை போட்டு சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சிசிடிவி காட்சி மூலம் உரியவர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருபவர் கோதண்டம் என்பவர், நேற்று காலை ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்த போது அதில் இருந்த குப்பை தொட்டியில் கைப்பை ஒன்று இருந்தது.
அதனை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் ஆய்வாளர் சந்துரு தலைமையில் வந்த காவல்துறையினர் நகை பையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: சென்னையில் கரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது?
மேலும், ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 35 வயதுடைய பெண் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகை பையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் குன்றத்தூரில் 35 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் வாய்மொழியாக காவல்துறையினருக்கு தெரிவித்த நிலையில் பின்னர் அவர் வீட்டிற்க்கு வந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்தபோது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர்.
அப்போதுதான் அவர் 43 சவரன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது குறித்து காவல்துறையினர் அவரது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குன்றத்தூர் காவல்துறையினர் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. உரிய நேரத்தில் நகை பையை கண்டெடுத்து கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இதயம் முரளி படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு!

முதல்வர் விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிக் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு!

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி கோல்கீப்பர்!
முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



