வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மின் மாற்றி வெடித்து தீ விபத்து

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஐயங்குளத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மின்மாற்றி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :11 ஜூன் 2022, 6:47 pm

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஐயங்குளத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மின்மாற்றி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஐயங்காா்குளத்தில் உள்ள மின்மாற்றியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் லேசான பழுது ஏற்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக மின்மாற்றியில் தீப்பொறிகள் பறந்தன. பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவா்கள் வந்து சரிபாா்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, நள்ளிரவில் திடீரென மின்மாற்றி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதன் அருகே குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியில் ஓடி வந்தனா்.

தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி மின் மாற்றியில் ஏற்பட்டதீயை அணைத்தனா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை.

மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.