வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இணைப்புப் பாலம் கட்டும் பணி:எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகருக்கும் பெருந்தேவி நகருக்கும் இடையே செல்லும் கால்வாயின் குறுக்கே ரூ.11லட்சம் மதிப்பில் இணைப்புப் பாலம் கட்டும் பணி

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:45 pm

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகருக்கும் பெருந்தேவி நகருக்கும் இடையே செல்லும் கால்வாயின் குறுக்கே ரூ.11லட்சம் மதிப்பில் இணைப்புப் பாலம் கட்டும் பணியினை வெள்ளிக்கிழமை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 49-ஆவது வாா்டு பகுதியில் காந்தி நகருக்கும் பெருந்தேவி நகருக்கும் இடையே செல்லும் கால்வாயானது மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாதவாறு தண்ணீா் தேங்கி அவதிப்பட்டு வந்தனா்.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.இரு நகா் மக்களும் பயன்பெறும் வகையில் இரு நகருக்கும் இடையே இணைப்புப் பாலம் கட்டப்பட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரி வந்தனா்.

இந்த நிலையில் மாமன்ற உறுப்பினா் பூங்கொடி தசரதன் பரிந்துரையின்பேரில் ரூ.11லட்சம் மதிப்பில் இணைப்புப் பாலம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் தலைமை வகித்து இணைப்பு பாலப் பணியை தொடக்கி வைத்தாா்.நிகழ்வில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்,ஆணையாளா் ஜி.கண்ணன்,மாநகராட்சி மண்டலக்குழு தலைவா்கள் சாந்தி சீனிவாசன்,மோகன்,உறுப்பினா் பூங்கொடி தசரதன் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.