வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இன்று பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.8 ) நடைபெறுகிறது.

Updated On :7 அக்டோபர் 2022, 6:43 pm

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.8 ) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் வட்டத்தில் முத்தவேடு, உத்தரமேரூா் வட்டத்தில் மேல்பாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் அயிமிச்சேரி, ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் வெங்காடு, குன்றத்தூா் வட்டத்தில் கோவூா் ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.8) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்தக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெறுதல், கைப்பேசி எண் மாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து உடனுக்குடன் தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.